சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் நோக்கில் இந்தியா, இலங்கை உட்பட பல நாடுகளில் IMAX Theater கள் ஆரம்பிக்கபட்டாலும், அவற்றில் திரைப்படங்களைப் பார்க்கப் போகும் பார்வையாளர்கள் பொதுவாக IMAX Theater இல் படம் பார்த்த பிறகு கழுத்து வலி, கண் பார்வையில் தற்காலிக கோளாறு, கண் வலி, தலை வலி ஏற்படுவதாக கூறுவதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள்.
அவ்வாறான உடல் உபாதைகளை பார்வையாளர்கள் அனுபவிப்பதற்குக் காரணம், அந்த ஐமேக்ஸ் திரையரங்கோ(IMAX Theater) அல்லது ஐமேக்ஸ் திரையையின்(Screen) அமைப்போ இல்லை. நீங்கள், அந்த திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்பதற்கு தெரிவு செய்த இருக்கைகளின்(Seat) அமைவிடமாகும்.
திரையில் இருந்து எந்தளவுக்கு முன்னுக்கு Seat களை தெரிவு செய்கிறோமோ அந்த அளவுக்கு கண்களை நன்றாக திறந்து திரையை நோக்க நேரிடும். அது கண்களுக்கு அசெளகரியமாக இருக்கும்.
திரையில் இருந்து எந்தளவுக்கு பின்னுக்கு Seat களை தெரிவு செய்கிறோமோ அந்த அளவுக்கு ஒரு சிறந்த இசை(Dolby Digital 5.1/Surround Sound) அனுபவத்தை பெற முடியாமல் போகும்.
IMAX Theater களில் திரைப்படங்கள் பார்க்கும் போது எப்போதும் தியேட்டரின் நடுப்பகுதியில் இருக்கைகளை தெரிவு செய்ய வேண்டும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள Light Blue/Cyan Color(வெளிர் நீல நிற) பகுதியில் உங்கள் இருக்கை அமைந்தால், அதுவும் அதன் நடுப்பகுதியில் இருக்கை கிடைத்தால் ஐமேக்ஸ் தியேட்டரின் அம்சங்களை முழுமையாக எந்தவொரு அசெளகரியமும் இல்லாமல் அனுபவிக்கக் கூடியதாக இருக்கும்.
3D திரைப்படங்களை IMAX Theater இல் பார்க்கும் போது மஞ்சள் நிறத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் கடைசி இரு Rows களையும் தெரிவு செய்யலாம். அதன் மூலம் நிறைவான 3D அனுபவத்தை பெற முடியும். ஆனால் என்ன, கழுத்து வலியை தவிர்க்க முடியாது.
3D திரைப்படங்களை முதன் முதலில் பார்க்கும் போது சிலருக்கு வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுவது இயல்பானதாகும்.
IMAX Screen களுக்கு மிக அருகில் உள்ள இருக்கைகளை தெரிவு செய்யும் போது Screen எல்லாப் பகுதியிலும் ஒரே நேரத்தில் உங்களால் Focus செய்ய முடியாது போக அதிக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக கூட சிலருக்கு பார்வையில் தற்காலிக பிரச்சனை, தலைவலி ஏற்படலாம். திரைப்படத்தில் சுழல்வது போன்ற காட்சி இருந்தால், நீங்கள் பார்க்கும் Screen ன்னும் சுழல்வது போன்ற தோற்றப்பாடு ஏற்படும்.
திரைப்படத்தின் நீளம் 10 நிமிடங்களாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் ஆங்கிலத் திரைப்படங்கள் குறைந்தது 90 நிமிடங்கள் இருக்கும். தமிழ் திரைப்படங்கள் குறைந்தது 120 நிமிடங்கள் இருக்கும். அந்த வகையில் அவ்வளவு நேரம் அந்த அசெளகரியத்தை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா?
சாப்பிட்டுக் கொண்டே திரைப்படங்கள் பார்க்கும் பழக்கம் இருந்தால், அதனை மாற்றவும். அதனால் கூட உங்கள் உடல் எடை அதிகரிக்கலாம். திரைப்படத்தில் கவனம் இருக்கும் போது, வழமையை விட அதிக உணவை நீங்கள் மெய்மறந்து எடுத்துக் கொள்ளலாம்.
தியேட்டருக்கு திரைப்படம் பார்க்க மாத்திரம் செல்லவும். திரையரங்கினுள் நுழையும் முன்னரே வயிறு நிறைய, Cinema Hall இற்கு வெளியே, குறைந்த விலையில் உணவும், பாணமும் எடுத்துக் கொள்ளலாம்.
ஐமேக்ஸ் திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்பது அதிகம் செலவான விடையமாகும். சாதாரண திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்பதை விட 4 மடங்கு ஐமேக்ஸ் திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்பதற்கு டிக்கெட்டுக்கு மாத்திரம் செலவாகும். (இது எதிர் காலத்தில் குறையலாம்)
சாதாரண தியேட்டர்கள் போல ஊருக்கு ஒரு IMAX Theater இருக்காது. அண்மைய தரவுகளின் படி, இந்தியாவில் 78 IMAX Theaters களும்(78 IMAX theaters in India as of July 12, 2024), இலங்கையில் ஒரு IMAX Theater ரும் உள்ளது. சிலர், IMAX Theater இல் படம் பார்ப்பதற்கு என்றே வெளியூருக்கு செல்வதும் உண்டு.
இலங்கையில் ஒரு திரைப்படத்தை IMAX Theater(Havelock City Mall) இல் பார்ப்பதற்கு ஒருவருக்கு குறைந்தது 4200 ரூபாய்(14 United States Dollar - at Year 2024 Data) செலவாகும்.
Keywords: How to watch movies on IMAX Theater? Tips to choose seats to watch movie on IMAX Screen
No comments:
Post a Comment