இலங்கையில் விரைவில் தொலைக்காட்சி சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்படவிருக்கிறது. அதற்கான செயற்பாடுகள் 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
அரசாங்கத்தால் இலங்கைத் தொலைகாட்சி சேவையை மேம்படுத்த தகுந்த நியமத்தை பரிந்துரைக்கவென ஒரு உபகுழு உருவாக்கப்பட்டது. அவர்கள் DVB-T2 நியமத்தைப் பரிந்துரைத்தனர். ஆகவே இந்தியா போன்ற நாடுகளில் பாவனையில் உள்ள DVB-T2 நியமத்தைப் பயன்படுத்த உத்தேசித்திருந்தனர். அதற்கேற்றால் போல் உள் நாட்டு தொலைக்காட்சி அலைவரிசைகளான Sirasa TV, Hiru TV, Derena TV போன்றவை அந்த நியமத்திற்கு உண்டான கருவிகளை உபயோகிக்கத் தொடங்கியிருந்தனர்.
ஆனால் பின்னர் ஜப்பான் நாட்டின் ISDB-T நியமத்தை உள்வாங்கிக் கொள்வதாக அரசாங்கம் அறிவித்து அதற்கான வேலைகளை ஆரம்பித்தது. இதன் பின்னனியில் அரசியல் காரணங்களும் ஜப்பான் நாட்டினால் எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளும் இருப்பதாக பலர் கருதினர்.
தொழில்நுட்பம் பற்றிய அறிமுகம்:
அலைமருவி (Analog அல்லது analogue) தொலைக்காட்சி என்பது அலைமருவிய பரப்புகை மூலம் ஒத்திசைந்த ஒலி மற்றும் ஒளி குறிப்பலைகளை ஒளிபரப்புவதாகும். இந்த முறை பரப்புகையில் ஒளிப்படத்தின் பல்வேறு புள்ளிகளில் உள்ள ஒளிர்மை, வண்ணப்பொலிவு போன்ற தகவல்களும் ஒலியின் பண்புகளும் அவற்றை ஏற்றிச் செல்லும் மின்காந்த அலையின் ஏதேனும் ஒரு பண்பை (அலையின் அளவையோ, அதிர்வெண்ணையோ, அலைக் கட்டத்தையோ) தொடர்ந்த முறையில் மாற்றி அனுப்பப்படுகிறது. எண்ணிமத் தொலைக்காட்சி வரும்வரை அனைத்து தொலைக்காட்சி ஒளிபரப்புகளும் அலைமருவிய முறைமையிலேயே ஒளிபரப்பப்பட்டன. அலைமருவித் தொலைக்காட்சி கம்பியில்லா பரப்புகை புவிப்புறத் தொலைக்காட்சி மூலமும் கம்பிவடத் தொலைக்காட்சியாக ஓரச்சு கம்பிவடம் மூலமும் பரப்பப்பட்டன.
டிஜிட்டல் தொலைக்காட்சி/எண்ணிமத் தொலைக்காட்சி (Digital television, DTV) அல்லது எண்மருவித் தொலைக்காட்சி எனப்படுவது ஒளித மற்றும் ஒலித தகவலோடை எண்ணிம செய்முறையில் அனுப்பப்படுவதாகும். இது முழுமையும் அலைமருவி செய்முறையில் தனித்தனி அலைவரிசைகளில் அனுப்பப்படும் அலைமருவித் தொலைக்காட்சிக்கு எதிரானதாகும். தொலைக்காட்சித் தொழினுட்பத்தில் 1950களில் வண்ணத் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இது கருதப்படுகிறது. இதனால் வானொலி அலைக்கற்றை சேமிக்கப்படுவதால் உலகின் பல நாடுகளும் அலைமருவித் தொலைக்காட்சி பரப்புகையிலிருந்து எண்ணிமத் தொலைக்காட்சிக்கு மாறி வருகின்றன. ஆனால் உலகின் பல பகுதிகளிலும் ஒரே சீர்தரம் பேணப்படாது வெவ்வேறு சீர்தரங்கள் நிலுவையில் உள்ளன:
முன்னேறிய தொலைக்காட்சி முறைமைக் குழு (Advanced Television System Committee, ATSC) சீர்தரம் புவிப்புற பரப்புகையில் ஐக்கிய அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
எண்ணிம ஒளிதப் பரப்புகை - புவிப்புறம் (DVB-T) ஐரோப்பாவிலும் ஆத்திரேலியாவிலும் கையாளப்படுகிறது.
ISDB-T என்றால் என்ன? புவிப்புற ஒருங்கிணைந்த சேவைகள் எண்ணிம பரப்புகை . ISDB-T International என்பது H.264/MPEG-4 AVC என்பவற்றைப் பயன்படுத்தி Integrated Services Digital Broadcasting (ISDB) யை தழுவி உருவாக்கிய டிஜிட்டல் தொலைக்காட்சி சேவைக்கான நியமமாகும்(Standard).
புவிப்புற ஒருங்கிணைந்த சேவைகள் எண்ணிம பரப்புகை (ISDB-T) மிகுந்த முன்னேற்றமான தொழினுட்பமாக விளங்குகிறது. இதன் மூலம் நிலைத்துள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தவிர எடுத்துச்செல்ல வல்ல அல்லது நகர்பேசி தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் நல்ல முறையில் வழங்க முடியும். இது பல கட்ட பரப்புகையை ஆதரிப்பதுடன் முன்னேறிய ஒளித, ஒலித குறியீடுக் கருவிகளைக் கொண்டுள்ளது.
எண்ணிம புவிப்புற பல்லூடக பரப்புகை (DTMB) ஒத்தியங்கு நேரப்பகுப்பு (TDS)- செங்குத்து அதிர்வுப்பகுப்பு சேர்த்தனுப்பும் தொழினுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
அனலோக் தொலைக்காட்சி அலைவரிசைகள் எவ்வாறு இயங்குகின்றது?
தொலைக்காட்சி அலைவரிசையின் பிரதான கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒளிபரப்புக் கோபுரத்திற்கு சிக்னல் அனுப்பப்பட்டு அக்கோபுரம் மூலம் அலை வடிவில் அத்தொலைக்காட்சி அலைவரிசை நமது வீடுகளுக்கு வந்தடைகிறது. இதற்கென ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசைக்கும் தனித்தனியே frequency கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக: கொழும்பில் சக்தி TV இல் UHF 25 ஒளிபரப்பப்படும் போது, கிளிநொச்சியில் UHF: 46 ஒளிபரப்புச் செய்யப்படுகிறது.
அனலொக் முறையில் உள்ள பிரச்சனைகள் என்ன?
இந்த முறையில் ஒளிபரப்பை மேற்கொள்ளும் பொழுது அணைவருக்கும் ஒரே தரமான தெளிவான தொலைக்காட்சி அலைவரிசைகள் பார்க்கக் கிடைப்பதில்லை. மேலும் பிடித்தமான அலைவரிசையை தெளிவாகப் பெற்றுக் கொள்ள அடிக்கடி வீட்டில் உள்ள அண்டனாவை வெவ்வேறு திசைகளுக்குத் திருப்ப வேண்டி ஏற்படும். ஒரு தொலைக்காட்சி அலைவரிசையின் ஒளிபரப்பினுள் இன்னொரு தொலைக்காட்சி அலைவரிசையின் தடங்கள் அல்லது கலப்பு ஏற்படலாம். தொலைக்காட்சி அலைவரிசை நிறுவனத்தால் பார்வையாளர்களுக்கு உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய HD நிகழ்ச்சிகளை இந்த நியமத்தைப் பயன்படுத்தி வழங்க முடியாமை. தேவையான frequency கள் வழங்கப்படாமையால் அனைத்துப் பகுதிகளுக்கும் தொலைக்காட்சி அலைவரிசையைக் கொண்டு சேர்க்க முடியாமை. தெளிவான காட்சிகளை மக்களுக்கு வழங்க அதிகளவு சக்தியைப் பாவித்து ஒளிபரப்ப வேண்டிய நிலைமை போன்றவற்றை சொல்லலாம்.
டிஜிட்டல் Terrestrial (புவிப்புற) ஒளிபரப்பு எவ்வாறு நடைபெறுகிறது?
சில செயற்பாடுகள் அனலோக் ஒளிபரப்பை ஒத்தது. அதாவது ஒளிபரப்பு மத்திய நிலையத்தினால் தொலைக்காட்சி அலைவரிசை சிக்னலை வழங்கி, அதை frequencyகளுடாக நம்வீட்டில் உள்ள அண்டனாவின் மூலம் நமது தொலைக்காட்சியில் அவ் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பெறுவது.
ஆனால் இங்கு பயன்படுத்தப்படும் ஒளிபரப்பு முறை வித்தியாசமானதாகும்.
அனலோக் முறையில் ஒளிபரப்பு மத்திய நிலையத்தின் ஊடாக தொலைக்காட்சி அலைவரிசையை தமக்கு சொந்தமான ஒளிபரப்பு கோபுரங்களுடாக வெவ்வேறு frequencyகளைப் பயன்படுத்தி ஒளிபரப்பு வீட்டில் உள்ள தொலைக்காட்சித் திரையில் தோன்றச் செய்கிறோம்.
உதாரணமாக:
கொழும்பு - பிதுருதாலகால - தொலைக்காட்சி - VHF 5 Antenna ஊடாக - வீட்டுத் தொலைக்காட்சிக்கு.
கொழும்பு - பிதுருதாலகால - தொலைக்காட்சி - Channel Eye Antenna ஊடாக - வீட்டுத் தொலைக்காட்சிக்கு.
ஆனால் டிஜிட்டல் தொலைக்காட்சி நியமத்தில் அவ்வாறு இல்லை
ஒரு நிறுவனத்தின் இயலுமையைப் பொறுத்து தன் அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளையும் ஒரே frequency ஊடாக ஒளிபரப்புதல்
அல்லது
பல தொலைக்காட்சி அலைவரிசைகளை(ITN, Shakthi TV, Sirasa TV, Star Sports..மேலும் பல) ஒரு ஒளிபரப்பு மத்திய நிலையத்திற்குப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து ஒரு ஒளிபரப்பு கோபுரம் ஊடாக வீட்டு அண்டனாக்களுக்கு சிக்னல்களை அனுப்பி அவற்றை தொலைக்காட்சியில் பெற்றுக் கொள்ளல்.
நாம் அறிவோம் அனலோக் முறையில் ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசைகளும் வெவ்வேறு frequency(VHF 05/ UHF 50/ UHF 21/UHF 39) களைப் பயன்படுத்தி ஒளிபரப்பை மேற்கொள்கின்றன என..
ஆனால் டிஜிட்டல் தொலைக்காட்சி நியமத்தில் ஒளிபரப்பு மத்திய நிலையத்திற்கு அனுப்பப்படும் அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் ஒரே ஒரு frequency மட்டுமே கொடுக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது. மத்திய நிலையத்திற்கு அனுப்பப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து 2, அல்லது 3 என தொலைக்காட்சி அலைவரிசைக் குழுக்களுக்கு வழங்கப்படும் frequencyகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். எப்படியிருந்தாலும் நம்மால் இந்த நியமத்தின் மூலம் ஒரு frequency இல் பல தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பெற முடியும்.
உதாரணமாக: இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள DVB T2 நியமத்தில் ஒரு frequency இல் கிட்டத்தட்ட 6 தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒளிபரப்பப்படுகின்றனவாம்.
டிஜிட்டல் Terrestrial தொலைக்காட்சி அலைவரிசைகளை எமது வீட்டின் தொலைக்காட்சி பெட்டிகளில் பெற்றுக் கொள்வது எப்படி?
நம் வீட்டுத் தொலைக்காட்சிகளில் காணப்படும் டிஜிட்டல் டியூனர் மூலம் அல்லது நம் தொலைக்காட்சிப் பெட்டியில் அவ் வசதி இல்லாவிடின் டிஜிட்டல் box அதாவது STB பொருத்துவதன் மூலம் நாம் அவ் தொலைக்காட்சி அலைவரிசைகளை கண்டுகழிக்கலாம்.
தொலைக்காட்சிப் பெட்டியில் உள்ள டியிட்டல் டியூனர் மட்டும் போதுமானதா? இல்லை. இந்த நியமத்திற்கான ஒளிபரப்புக் கோபுரங்கள் மூலம் ஒளிபரப்பும் சிக்னல்களை உள்வாங்கிக் கொள்ள நமது தொலைக்காட்சிப் பெட்டியில் உள்ள டியிட்டல் டியூனர் support பண்ண வேண்டும். உதாரணமாக ISDB-T நியமத்தினூடாக ஒளிபரப்புக் கோபுரங்கள் சிக்னல்களை ஒளிபரப்புமாயின் உங்கள் வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் DVB T2 நியமத்திற்கான டிஜிட்டல் டியூனர் இருக்குமாயின் உங்களால் அந்த தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பார்வையிட முடியாது. ஆகவே உங்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் ISDB-T நியமத்தில் ஒளிபரப்பப்படும் டிஜிட்டல் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பார்க்க வேண்டுமாயின் கட்டாயம் ISDB-T நியமத்தை support பண்ணும் டியிட்டல் டியூனர் இருக்க வேண்டும் இல்லை என்றால் ISDB-T நியமத்தை support பண்ணும் STB டிஜிட்டல் பாக்ஸ் பொருத்தித் தான் பார்க்க முடியும்.
தொலைக்காட்சிப் பெட்டியில் உள்ள டியிட்டல் டியூனர் இருக்குமாயின் டிஜிட்டல் தொலைக்காட்சிகளைப் பெற்றுக் கொள்ள வேறு என்ன தேவை? டிஜிட்டல் தொலைக்காட்சி நியமத்திற்கு என பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் அண்டனாவை நாம் தற்பொழுது அனலோக் தொலைக்காட்சி அண்டனா பொருத்தியிருக்கும் இடத்தில் பொருத்த வேண்டும். ஆனால் தற்பொழுது சந்தையில் இருக்கும் தொலைக்காட்சி அண்டனாக்கள் பெரும்பாலும் இந்த டிஜிட்டல் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பெற்றுக் கொள்ள பயன்படுத்தக் கூடிய வகையிலேயே உருவாக்கபட்டுள்ளன. எதற்கும் நீங்கள் புதிதாக வாங்குவதாக இருந்தால் விசாரித்து வாங்கவும்.
டிஜிட்டல் Terrestrial தொலைக்காட்சி நியமத்தின் ஊடாக தொலைக்காட்சி அலைவரிசைகளை மட்டுமா பெற முடியும்? இல்லை. டியிட்டல் தொலைக்காட்சி frequency ஊடாக டிஜிட்டல் வானோலி அலைவரிசைகளையும் நமது தொலைக்காட்சியில் வானோலி சாதனத்தில் கேட்பது போல் காட்சி இன்றி கேட்க முடியும்.
டிஜிட்டல் Terrestrial தொலைக்காட்சி அலைவரிசைகளை தொலைக்காட்சி பெட்டிகளில் மாத்திரமா பார்க்க முடியும்? இல்லை. டிஜிட்டல் Terrestrial தொலைக்காட்சி Support பண்ணும் தொலைக்காட்சி பார்க்கக் கூடிய Mobile போன்களிலும் பார்க்க முடியும்.
டிஜிட்டல் தொலைக்காட்சி நியமத்தின் மிக முக்கிய நன்மை என்னவென்றால் இதன் மூலம் மிகவும் தரமுயர்ந்த(e.g HD) உள்ளடக்கமுள்ள நிகழ்ச்சிகளை அல்லது தரவுகளை ஒளிபரப்ப முடியும். அதற்காக இதன் மூலம் தரம் குறைந்த (e.g SD) உள்ளடக்கமுள்ள நிகழ்ச்சி ஒளிபரப்பை செய்ய முடியாது என்றில்லை. டிஜிட்டல் தொலைக்காட்சி நியமமானது பெரிய திரையோ! சிறிய திரையோ! எந்தத் தரத்திலான ஒளிபரப்பையும் ஏற்றுக் கொள்ளும்.
இவற்றிற்கு மேலதிகமாக தொலைக்காட்சி அலைவரிசைகளின் நிகழ்ச்சி நிரலைப் பார்க்கும் வசதி, நிகழ்ச்சியை வெவ்வேறு பார்வைக் கோணங்களில் பார்க்கும் வசதி(தொலைக்காட்சி அலைவரிசை அதற்கு இயைபடைந்திருந்தால் மாத்திரம்), கருந்துக் கணிப்பு நிகழ்ச்சிகளுக்கோ அல்லது போட்டி நிகழ்ச்சிகளுக்கு வாக்களிக்கும் வசதி, காலநிலை தகவல்களைப் பெறும் வசதி, அனர்த்தங்களுக்கான முன்னறிவிப்பைப் பெறும் வசதி போன்றவற்றை டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் பெற முடியும்.
இது போன்ற டிஜிட்டல் தொலைக்காட்சி நியமம் பற்றிய மேலதிக தகவல்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
தொகுப்பு மற்றும் மொழி பெயர்ப்பு
கபிலன் சச்சிதானந்தன்.
நன்றி FM & TV Sri Lanka Digital மற்றும் Wikipedia, செய்தி இணையத்தளங்கள்.
Good
ReplyDelete