இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சனையால் வெளிநாட்டு அலைவரிசைகளுக்கு வாடகை செலுத்த முடியாமல் DTH/IPTV/Cable Tv போன்றன தற்காலிகமாக சில காலங்களுக்கு முடங்கலாம்.
Batapola Flexi Antenna
அவ்வாறான நிலையில் உங்கள் பொழுதுபோக்கிற்கு எந்தவொரு தடையும் இல்லாது இருக்க தற்போதே இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பார்க்கக் கூடிய Analog Tv அண்டனாக்களை வாங்குவது குறித்து ஆலோசனை செய்வது நல்லது.(20/04/2022)
அண்டனாவின் கம்பிகள் பெரும்பாலும் அலுமினியத்தால் செய்யப்பட்டவை
இலங்கையில் Analog Tv Antenna க்களை வாங்குவது எவ்வாறு? தற்போது Trend இல் உள்ள Analog Tv Antenna என்ன? என்பது பற்றி இந்தப்பதிவில் பார்ப்போம்.
தற்காலத்தில் இலங்கையின் எந்தவொரு பிரதேசத்திலும் உள்ள, Electrical Shop(தொலைக்காட்சி அண்டெனா கம்பிகள் விற்கும் கடைக்குச்) சென்று Tv Antenna வேண்டும் என்று கேட்டால், அவர்கள் நம்மிடம் கேட்பது "பட்டபொல அண்டனாவா?" என்று தான். Batapola Antenna என்றால் என்ன?
Batapola Antenna இன் பெட்டியினுள்ளே என்னென்ன பொருட்கள் இருக்கும்?
Batapola Antenna Booster, Antenna Cables(Coaxial Antenna Cable), Power Supply, Warranty Card/Paper Work
இலங்கைக்கு தொலைக்காட்சி தொழில் நுட்பம் அறிமுகமான காலத்தில் Dipole Antenna எனப்படும் கம்பி அண்டனாவே பாவனையில் இருந்தது. இவ்வகை கம்பி அண்டனாவில் ஒன்று அல்லது இரண்டு சமாந்தரமான கம்பியில் பல சிறிய கம்பிகள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும்.
இவ்வகை அண்டனாவின் முனையை ஒளிபரப்புக் கோபுரத்தை நோக்கி நிலைப்படுத்துவதன் மூலம் அதில் ஒளிபரப்பாகும் ஒரு சில UHF/VHF Analog Tv Channels களை பார்க்கக் கூடியதாக இருக்கும். இதன் காரணமாக ஒவ்வொரு தொலைக்காட்சி சேவையின் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பெற தனித்தனியாகவும் அவற்றின் ஒளிபரப்பு கோபுரத்தை நோக்கியும் அண்டனாக்களைப் பொருத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரு சில சேனல்களைத் தெளிவாகப் பார்க்க அடிக்கடி அண்டனா பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு குழாயைத் திரும்ப வேண்டி ஏற்படும்.
அதே நேரம் கம்பி அண்டனாக்களைப் பொருத்துவதற்கும் ஒவ்வொரு இடங்களுக்கும் தொழில்நுட்ப வல்லுனர்கள் தேவைப்பட்டனர். சாதாரண மக்களுக்கு டைபோல் அண்டனாக்களைப் பொருத்துவது அவ்வளவு இலகுவான காரியமாக இருக்கவில்லை. நிறைய அண்டனாக் கம்பிக்களை ஒரு உயரமான இரும்புக் குழாயில் பொருத்தும் போது பாரம் அதிகரிப்பதனாலும், சமனிலை குழம்புவதனாலும் அண்டனா பொருத்தப்பட்டுள்ள கம்பிகள் உடைந்து விழுந்த சம்பவங்களும் உண்டு.

இதன் காரணமாகவே சில புத்தாக்க விரும்பிகள் இரண்டு கம்பிகளைக் கொண்ட அதிக இடத்தை Cover செய்யக் கூடிய Booster உடன் கூடிய பட்டபொல அண்டனாவை உருவாக்கினர். இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாவித்துப் பார்த்ததன் மூலம் அதன் செயற்திறன் மற்ற அண்டனாக்களைக் காட்டிலும் சிறப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.
இலங்கையில் உள்ள Batapola(படபொல) எனும் ஊரில் உள்ள ஆசிரியரால்(Padmananda Malavige) Batapola Antenna ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது. இதனை Batapola Flexi Antenna என அழைத்தார். ஆனாலும் Batapola Sir உருவாக்கிய அண்டனா எனும் அறிமுகம் அதனை Batapola Antenna வாகவே சந்தையில் பிரபல்யம் அடையச் செய்தது. இதற்கென தனியாக தொழிற்சாலை இல்லை. இவரது வீட்டிலேயே Batapola Flexi Antenna யை உற்பத்தி செய்கிறார். Batapola Antenna விற்கான Patent Rights(உரிமம்) இவரிடமே உள்ளது.
ஆனால் Rohana Priyantha என்பவரும் Batapola Antenna தன்னுடைய கண்டு பிடிப்பு என உரிமை கோரி வருகிறார். அவர் தனது தயாரிப்புக்களை Tharindu Electronics எனும் நிறுவனத்தினூடாக விற்பனை செய்கிறார்.
Batapola Antenna இல் பல வகைகள் உண்டு. அவற்றில் காணும் பிரதானமான வேறுபாடாக "V" போன்று இருக்கும் கம்பியின் நீளத்தையும்(Short Tube Antenna Vs Long Tube Antenna), High Gain Booster(14900w antenna and 9900w) இன் அளவையும் கூறலாம்.
ஒளிபரப்புக் கோபுரங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கும் குறுகிய அண்டானா கம்பியும், ஒளிபரப்புக் கோபுரத்திற்கு மிகத் தூரமாக இருக்கும் வீடுகளுக்கும் நீளமாக கம்பிகளும் உகந்ததது. High Gain Booster இன் அளவும் அவ்வாறே! நீங்கள் பட்டபொல அண்டனா வாங்கும் போது உங்கள் வீட்டில் இருந்து ஒளிபரப்புக் கோபுரத்தின் தூரம் பற்றி விசாரித்து வாங்குவது நல்லது.
Batapola Antenna யை இரும்புக் குழாயில் உயரமான இடத்தில் பொருத்தும் போதும், அதன் Booster இல் Cable யைப் பொருத்தும் போதும் அதிகம் இறுக்கமாக ஆணிகள், மற்றும் Connectors களை திருகவோ அல்லது கொழுவவோ வேண்டாம்.
Batapola Antenna இனால் பெறப்படும் Signal அதிக காற்று, மற்றும் மழையினால் தற்காலிகமாக மாற்றங்களுக்கு உள்ளாகலாம்.
Original Batapola Antenna இல் மாத்திரமே அதிக சூரிய வெப்பத்தைக் தாங்கிப் பல காலம் நீடிக்கக் கூடிய Fiber Cover உள்ளது. அதற்காக சந்தையில் விற்பனையாகும் Other Company Batapola Antenna க்கள் கூடாது என்று சொல்லவில்லை. Original Batapola Antenna இல் கிடைக்கும் அதே தரமான சேவையை மற்றைய Company Batapola Antenna க்களிலும் பெற முடியும்.
தற்காலத்தில் ASC Electrical Batapola Antenna யை உற்பத்தி செய்து Daraz போன்ற eCommerce இணையத்தளங்களூடாக விற்பனை செய்கிறார்கள். சிலவற்றிற்கு 1 வருட உத்தரவாதமும் கொடுக்கப்படுகிறது.
daraz இல் Batapola Antenna வாங்கும் முன்னர் உங்கள் ஊரில் உள்ள Electrical Shops இல் இந்த நீளமான கம்பி வைத்த Batapola Antenna வைப் பற்றி விசாரிக்கவும். நீளமான கம்பி வைத்த Batapola Antenna வின் கம்பிகள் தற்போது தனியாக கொடுக்கப்படும். அவற்றை நாம் தான் அண்டனாவில் பொருத்த வேண்டும்.
daraz.lk இல் விற்பனை செய்யப்படும் Batapola Antenna களின் கம்பி, குறுகியதாக இருக்கும். நீங்கள் ஒளிபரப்புக் கோபுரங்களுக்கு அண்மையில் வசிக்காவிட்டால் என்னதான் தலைகீழாக நின்றாலும் அதில் எல்லா Tv Channels யையும் தெளிவாகப் பெற முடியாது.
உதாரணமாக Shakthi TV(இலங்கை) யை எடுத்துக் கொண்டால் அதற்கு Badulla, Colombo, Matale, Matara, Nuwara Eliya, Ratnapura, Kilinochchi போன்ற பிரதேசங்களில் இருந்த ஒளிபரப்புக் கோபுரங்கள் மூலம் UHF இல் தனது அலைவரிசையை ஒளிபரப்புச் செய்கிறது. நீங்கள் அந்தப் பிரதேசங்களுக்கு அருகில் வசிக்காவிட்டால் குறுகிய கம்பி உள்ள Batapola Antenna வை பொருத்தி தெளிவான அலைவரிசையைப் பெற்றுக் கொள்ள முடியாது.
நீங்கள் ஒளிபரப்புக் கோபுரங்களை அண்டிய பகுதிகளில் வசிக்காவிட்டால், நீளமான கம்புயுடைய Batapola Antenna, அல்லது இரண்டு கம்பிக் கூர்களுக்கு மேலதிகமாக Reflector பொருத்தப்பட்ட Batapola Antenna வை வாங்குவது தான் சிறந்தது.
Batapola Antenna வை எவ்வளவு உயரத்தில் பொருத்த வேண்டும்?
எல்லா அலைவரிசைகளையும் பெற வேண்டும் என்றால் நிலத்தில் இருந்து குறைந்தது 20 அடி உயரத்தில் Batapola Antenna யைப் பொருத்த வேண்டும். பொருத்திய பின்னர் 360 பாகையில்(நான்காக பிரித்து) அண்டனாவை சுழற்றி சுழற்றி Search செய்து தெளிவான அலைவரிசைகளை எந்தப் பக்கம் பெற முடிகிறது என்பதை இனங்காணவும். பின்னர் உயரத்தை கூட்டிக் குறைத்து அவற்றை மேலும் தெளிவாகப் பெற முயற்சிக்கவும்.
Batapola Antenna க்கள் Booster, Antenna Cables உடன் விற்பனையாகுவதால் அவற்றை நாம் தனியாக வாங்க வேண்டிய தேவையில்லை. குறைந்தது 10 மீட்டர் முதல் 15 மீட்டர் வரையான Co-Axial Cable உடன் விற்பனையாகிறது. Co-Axial Cable இன் நீளம் போதாது என்றால் நீங்களாக அதனை வெட்டி இணைக்கக் கூடாது. வாங்கு போதே தேவையான நீளத்தை கேட்டு வாங்கவும். ஒரே Cable இருக்க வேண்டியது இங்கு முக்கியமாகும்.
அதே நேரம் இரும்புக் குழாய்/தடியில் பொருத்தும் போது Batapola Antenna வுக்குக் கீழே இரும்பு குழாயுடன் சிறிதளவு Cable யை சுற்றி கட்டி வைக்கவும். இதன் மூலம் Cable தவறுதலாக இழுபட்டாலும் Batapola Antenna வுக்கு ஒன்றும் ஆகாது.
Batapola Antenna இனை எந்தவொரு தொலைக்காட்சியுடனும் இணைக்கலாம். Support all CRT, LCD, LED TVs
Batapola Antenna யை சில இடங்களில் TV க்கு அருகில், வீட்டினுள் பொருத்தினால் கூட சிறப்பாக தெளிவாக எல்லா சேனல்களும் கிடைக்கும்.
Batapola Antenna இனைப் கட்டாயம் இரும்புக் குழாயில் தான் பொருத்த வேண்டும் என்றில்லை.
ஆனால் காட்சி தெளிவில்லாமல் இருந்தால் Batapola Antenna யை உயரமான இடத்தில் பொருத்துவது நல்லது. குறைந்தது 12 அடி உயரமாவது இருக்கும் வகையில் அண்டனாவை நிலை நிறுத்தவும்.
வெயில் அதிகம் படாத இடத்தில் அண்டனாவைப் பொருத்தினால் அண்டனாவினை பல வருடங்களுக்கு பாவிக்கலாம்.
Batapola Antenna வினைப் பொருத்தும் போது, Transmitter கோபுரத்தை நோக்கி Batapola Antenna வின் முனை(முக்கோண) இருக்கக் கூடாது. ஒளிபரப்பு(Transmitter) கோபுரத்திற்கு எதிர்த் திசையில் Batapola Antenna வின் முனை இருக்கும் வகையில் Batapola Antenna வின் கம்பிகள்(Arc போல விரிந்த) ஒளிபரப்பு(Transmitter) கோபுரத்தை நோக்கியிருக்க வேண்டும்.
Batapola Antenna இன் மூலம் VHF & UHF Channels களையும் சிலவற்றில் FM Radio Channels களையும் பெற முடியும். இது தொடர்பான குறிப்பு Batapola Antenna இன் அட்டைப் பெட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
Batapola Antenna இனைப் பொருத்திய பின்னர் சிரச தொலைக்காட்சி(Sirasa Tv) தெளிவாக கிடைக்கும் பக்கத்திற்கு இருப்புக் குழாயைத் திருப்பி Batapola Antenna யை நிலை கொள்ளச் செய்யவும். அதன் பின்னர் Tv Channels Search செய்வதன் மூலம் அனைத்து இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகளையும் பெறக் கூடியதாக இருக்கும்.
ஒளிபரப்புக் கோபுரங்களை(TV Transmission Towers/Broadcast Towers) அண்டிய வீடுகளுக்கு இந்த வகை Batapola Antenna சிறந்தது.
மாடி வீட்டுத் தொகுதிகள், கட்டிடங்கள் அதிகம் நிறந்த பகுதி, கண்டி போன்ற மலைகள் அதிகமான பகுதிகளுக்கும் Batapola Antenna ஒரு சிறந்த தெரிவாக அமையும்.
Brand : Batapola Antenna
Manufactured: ASC Electrical
High Gain Booster14900W (1 Year Seller Warranty)
Frequency and Actual gain VHF - Low & FM : 40~108 MHZ 20~28db VHF - Hi TV : 170~230 MHZ 28~32db UHF TV : 470~890 MHZ 32~36db OUTPUT IMPEDANCE 75 Ohms F - Connector Maximum Output Level : 105db/uV Power Source AC 230 V 50Hz DC 12V
Batapola Antenna இன் மூலம் இலங்கையில் ஒளிபரப்பாகும் அனைத்து Tv Channels களையும் பெற முடியும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவை உங்கள் பிரதேசத்தில் ஒளிபரப்புக் கோபுரத்தைக் கொண்டிருக்க வேண்டியதும் அவசியமாகும்.
சில Batapola Antenna இன் Booster இல் ஒரு LED Light இருக்கும். அது வெறும் அலங்காரத்திற்காகவே ஒளிரப்படுகிறது. அது ஒளிராவிடினும் Batapola Antenna இயங்கும்.
இலங்கையர்களின் கண்டுபிடிப்பாகக் கருத்தப்படும் Batapola Antenna, ஜப்பான் நாட்டு அண்டனாத் தொழில்நுட்பத்தின் தழுவல் எனவும் சிலர் கூறுகின்றனர்.
இதன் காரணமாக Batapola Antenna இன் காப்பூரிமை தொடர்பாக இன்றும் பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது.
USB Cable மூலம் Digital/Analog Signal கொடுக்கும் Batapola Antenna க்களும் உள்ளன.

மேலதிகமாக அண்டனா கம்பிகள்(Reflector) இணைக்கப்பட்ட Batapola Antenna னாக்களும் சந்தையில் உள்ளன. Reflector கள் அண்டனாவுக்குக் கிடைக்கும் அலைவரிசையின் செறிவை அதிகப்படுத்த உதவும்.
Batapola Antenna இன் விலை அதிகமாக இருந்தால் அண்டனாவை இரும்புக் குழாயுடன் பொருத்தும் அச்சு இரும்பால் ஆனதா எனப் பார்த்து வாங்கவும். சாதாரணமாக தற்காலத்தில் 1900 ரூபாய் முதல் Batapola Antenna யை வாங்க முடியும்.
நீங்கள் வாங்கும் Batapola Antenna பச்சை நிறமாக இருந்தால், அது நீண்ட காலம் பாவிக்கும் என்ற கருத்து சமூகத்தில் நிலவுகிறது. அதற்காக கறுப்பு நிற Batapola Antenna கூடாது என்று அர்த்தம் இல்லை.
Batapola Antenna இனைப் பொருத்துவது தொடர்பான குறிப்புகள்:
Batapola Antenna இனை தடிமன் அதிகமான இரும்புக் குழாய்களிலும் பொருத்த முடியாது. கட்டாயம் இரும்புக் குழாயில் தான் பொருத்த வேண்டும் என்றும் அவசியம் இல்லை. தடி/பிளாஸ்டிக் குழாய்களிலும் பொருத்தலாம்.
Batapola Antenna இனை பொருத்தும் போது 5 அடி உயரத்தில் இருந்து அண்டனாவை நிலை நிறுத்தி Antenna வை Tune செய்து தேவையான தொலைக்காட்சி அலைவரிசைகள் எல்லாம் தெளிவாகத் தெரியும் வரை உயரத்தை அதிகரித்துக் கொண்டு சென்று தெளிவாகத் தெரியும் இடத்தில் நிரந்தரமாக நிலை நிறுத்தவும்.
ஆரம்பத்திலேயே மிகவும் உயரமான இடத்தில் பொருத்தினால் எந்தவொரு Tv Channels யையும் தெளிவாகப் பெற முடியாது. குறைந்த உயரத்தில் இருந்து Batapola Antenna(Booster) இன் உயரத்தை அதிகரிக்க வேண்டும்.
சில Batapola Antenna களில் blink ஆகும் வகையிலும், சிலவற்றில் எரிந்து கொண்டே இருக்கும் வகையிலும் ஒரு LED bulb அலங்காரத்திற்காக இருக்கும். சில Batapola Antenna களில் LED bulb இருக்காது. LED bulb எரியாவிட்டாலும் Batapola Antenna வேலை செய்யும்.
Batapola Antenna இனையும், அதன் Cable யையும் மின்சார(Main) இணைப்புகளுக்கு அருகில் பொருத்த வேண்டாம். மலைகள் அதிகமான இடங்களில் ஒளிபரப்புக் கோபுரத்தின் திசையை நோக்கி(தேவையாயின் உயரமாக) பொருத்தக் கூடிய ஒரு தொழில்நுட்ப உதவியாளரை அனுகுவது நல்லது.
எல்லாம் நேர்த்தியாக பொருத்தப்பட்டால் Power Supply இல் LED bulb எரியும். Power Supply இக்கும் Batapola Antenna இக்கும் இடையிலான Cable இணைப்பு(Connectors) தளர்வாக இருந்தால் Power Supply இல் LED bulb எரியாது. மின் இனைப்பு கொடுக்கப்பட்டிருக்கும் போதே Power Supply இல் பொருத்தப்பட்டிருக்கும் Connector யைக் கழட்டி, LED bulb எரியும் போது மீண்டு Connector லேசாக சொருகவும்.
அநேகமான Batapola Antenna வுக்கு ஒரு வருட உத்தரவாதம் கொடுக்கப்படும். வாங்க மறுக்க வேண்டாம்!
Keywords:
Batapola antenna is the most popular Tv antenna brand in Srilanka market.I think the recent for that Batapola antenna boosts signal strength significantly.The Original Batapola antenna comes to the market with V shape antenna and powerful booster.