Pages

என்னைப் பற்றி

நான் கபிலன் சச்சிதானந்தன்
Kapilan Sachchithananthan, Sri lanka.
Follow Me: @iamkapilan

Search Posts

Sunday, June 5, 2022

இலங்கையில் ஆரம்பமானது Freesat இலவச Satellite தொலைக்காட்சி சேவை

இலங்கைத் தொலைக்காட்சி அலைவரிசைகளை இனி Dialog DTH/Dialog Tv மற்றும் SLT Mobitel Peo Tv ஊடாக மாதாந்தம் காசு கட்டிப் பார்க்கத் தேவையில்லை. Dialog Tv, மற்றும் Peo Tv ஊடாக இலங்கைத் தொலைக்காட்சி அலைவரிசைகளையே அதிகம் பார்க்கும் நபராக இருந்தால் அவற்றைத் தலையைச் சுற்றி இனி தூக்கி எறிவது தான் சிறந்தது.

மாதாந்தக் கட்டணம் எதுவும் இன்றி இலவசமாக செய்மதியூடாக ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகளைக் கண்டுகளிக்கக் கூடிய சேவையை Freesat நிறுவனம் தற்சமயம் இலங்கையில் அதிகாரபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

Freesat Set Top Box

SES 12 (95°E)  செய்மதியூடாக ஒளிபரப்பாகும் DVB-S2X தொழில் நுட்பத்துடன் கூடிய Freesat சட்டலைட் தொலைக்காட்சி சேவையானது HD மற்றும் 4K தரத்தில் தனது சேவையை வழங்குகிறது. இதனை இலங்கையின் எப்பாகத்தில் இருந்தும் பெற முடியும்.

1. Freesat என்றால் என்ன?

Freesat என்பது DVB-S2X தொழில் நுட்பத்தினை பாவித்து satellite இனூடாக முழு இலங்கையையும் சென்றடையும் வகையில் வழங்கப்படும் Television Network ஆகும்.

2. Freesat உண்மையிலேயே இலவசமா?

ஆம். இது 100% இலவச சேவையாகும். இலங்கையில் இதுவரையில் இல்லாவிட்டாலும், உலகில் பல நாடுகள் இலவச  தொலைக்காட்சி சேவைகளை வெற்றிகரமான செயற்படுத்துகின்றன. உதாரணமாக: இங்கிலாந்து(Freesat), இந்தியா(Freedish)

3. இதில் எவ்வாறான channels களைப் பார்க்க முடியும்?

Freesat பிரதானமாக இலங்கைத் தொலைக்காட்சி அலைவரிசைகளை Digital தொழில் நுட்பத்துடன் இலவசமாக வழங்கும் Network  ஆகும். அவற்றைத் தவிர Pay-TV(கட்டணம் செலுத்திப் பார்க்க அவசியமான) இல்லாத வெளி நாட்டு தொலைக்காட்சி அலைவரிசைகளையும் வழங்குகிறது.

4. Free என விளம்பரம் செய்தாலும் பிற்காலத்தில் காசு கட்ட வேண்டிய நிலைமை ஏற்படுமா?

இல்லை. இது முற்றுமுழுதாக இலவசமான சேவையாகும்.

5, Receive செய்ய  Kit வாங்க வேண்டுமா?

ஆம். மற்ற Digital TV சேவைகளைப் போல  இந்த சேவையையும் பெற்றுக் கொள்ள Receiver(Set Top Box) தேவை. அதனை நாடு பூராகவும் இருக்கும் முகவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

6. இதனை தற்போது நம்மிடம் இருக்கும் Free-to-Air STB யினைப் பயன்படுத்தி பார்க்க முடியுமா?

Freesat பார்வையிடுவது free யாக இருந்தாலும் Free-to-Air service இல்லை. இதனை Free-to-View என அழைப்போம். அதாவது இவர்கள் வழங்கும் சேவை encrypt செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய STB வாங்கினால் மாத்திரமே இதனைப் பார்க்க முடியும். இதற்கான முக்கிய காரணம் நமது தொலைகாட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் (content) copyrights இன் அடிப்படையில் அது நமது தேசத்தின் எல்லைக்குள் மாத்திரம்(Territorial Rights) ஒளிபரப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையாகும்.

Satellite signal பிராந்தியம் முழுதும் ஒளிபரப்பாவதால் மேலே குறிப்பிட்ட சட்டங்களுக்கு அமையை சேவையை வழங்க encrypt செய்வது அவசியமாகிறது.

7. Freesat, Digital Terrestrial TV யை விட சிறந்ததாக இருப்பது ஏன்?

இலங்கை போன்ற பூகோல ரீதியில் தனித்துவமான அமைவுகளை(மலைகள்) கொண்ட கொண்ட நாடுகளில் Terrestrial Broadcasting செய்வது கடினமாகும். இதனை நாம் இன்றும் உணர முடியும். இலங்கையில் எல்லா மூலைகளிலும் ஒரே அளவான signal யைப் பெற முடியாது. தற்போது பாவனையில் இருக்கும் Analog Television தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி தொலைக்காட்சி அலைவரிசைகளை எல்லா இடங்களிலும் துல்லியமாக பார்க்க முடியாது. இதன் காரணமாகவே extra terrestrial relay ஆக இருக்கும் satellite இனூடாக broadcasting  செய்வது உபயோகமாக இருக்கிறது. இதன் மூலம் இலங்கையில் ஒவ்வொரு வீட்டிலும் Digital TV யை துல்லியமாக பார்க்கக் கூடியதாக இருக்கும்.

அதனைத் தவிர தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்படும் Frequency களின் அளவு மற்றும் அவற்றில் உள்ள பிரச்சனைகள்(limited frequency and anomalies in electronic frequencies) காரணமாக HD மற்றும் 4K தரத்தினால் ஆன ஒளிபரப்பினை Terrestrial ஊடாக வழங்குவது கடினமாகும். இதன் காரணமாகவே Freesat ஒரு தீர்வாக முன் வைக்கப்பட்டுள்ளது.

8. என்னால் Freesat விற்பனை முகவராகவோ அல்லது Installer ஆகவோ ஆக முடியுமா?

இலங்கை முழுவதும் இருந்து 160 முகவர்களுக்கான விண்ணப்படும்  Freesat இனால் கோரப்பட்டுள்ளது. உங்களுக்கும் இதில் ஆர்வம் இருந்தால், Satellite TV, CCTV போன்றவற்றை விற்பனை செய்வதில் மற்றும் பொருத்துவதில்(distribution/installation) அனுபவம் இருந்தால்  இதனை அழுத்தி விண்ணப்பிக்கவும்.

9. Freesat இனை நாமே பொருத்தலாமா?

ஆம். ஆனால் ஒரு Dish Tv பொருத்தக் கூடிய வல்லுனரின் உதவியைப் பெறுவது சிறந்தது.

10. Freesat இனை ஏன் வாங்கக் கூடாது?

இந்தியத் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகள் எதுவும் இதில் இடம் பெறாது. கட்டணம் செலுத்திப் பார்க்கும் எந்த அலைவரிசையும் இதில் இருக்காது. இலங்கைத் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பார்ப்பவர்கள் மாத்திரம் வாங்கவும்.

"Freesat" புதிய HD Setup box இன் விலை 9250 ரூபாய் ஆகும். இது தொடர்பாக மேலும் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

"Freesat" மூலம் தற்சமயம் 34 தொலைக்காட்சி(உள்ளூர் மற்றும் வெளி நாட்டு) அலைவரிசைகளுக்கு மேல் பார்வையிட முடியும்.

Freesat Tamil

Sri Dalada Rupavahini | National Television | ITN | TNL | Swarnavahini | TV Derana | Hiru TV | Siyatha TV | Channel EYE | Wasantham TV | Ada Derana 24 | Supreme TV | Star Tamil Television | Rangiri Sri Lanka | The Buddhist | Charana TV | NHK World | DW | Freetube | Al Jazeera | France 24 | B4U Movies | DD Sports | Free Movies | 9XM | Kalaignar TV | Sirippoli TV | Zing | Hitz99 | TRT World | Arirang Korea | Euronews | CGTN | TV5 Monde | Shakthi Tv | Sirasa Tv | TV1