Pages

என்னைப் பற்றி

நான் கபிலன் சச்சிதானந்தன்
Kapilan Sachchithananthan, Sri lanka.
Follow Me: @iamkapilan

Search Posts

Monday, July 29, 2024

Tips to Pass Sri Lanka Driving Written Exam in Tamil

இலங்கையில் டிரைவிங்க் லைசென்ஸ் எடுப்படுதற்கான எழுத்துப் பரீட்சையை தமிழ் அல்லது சிங்களத்தில் செய்வதை விட, உங்களுக்கு ஆங்கில மொழியில் ஓரளவுக்கு தேர்ச்சி இருந்தால், ஆங்கில மொழியை தெரிவு செய்து இந்த பரீட்சைக்கு முகங்கொடுப்பது சிறந்ததாகும்.

Driving License Exam in Tamil - Sri Lanka

அதற்குக் காரணம், வினாத்தாள்களை முதலில் சிங்களத்தில் உருவாக்கிய பின்னர் அதனை தமிழுக்கு, ஆங்கிலத்திற்கு மொழி பெயர்ப்பார்கள். அவ்வாறு மொழி பெயர்க்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் காலங்காலமாக சரி செய்யப்படாமலேயே உள்ளது. 

ஆங்கில மொழி மூலம் பரீட்சையை தோற்ற தயாராகும் போது சிங்கள Learners களிடம் உள்ள ஆங்கில குறிப்புகள், பரீட்சை வினாக்களை உங்களால் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். இவற்றை வைத்துக் கொண்டு தமிழ் மொழி மூல பரீட்சைக்கும் தயாராக முடியும்.

ஒரு பரீட்சையின் போது ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதி வினாப்பத்திரங்கள் பயன்படுத்தப்படும். அதன் காரணமாக உங்களுக்கு கிடைத்தது போல, ஒரே வினாத்தாள் உங்களுக்கு பக்கத்தில் இருப்பவருக்கு கிடைக்காது. 

பரீட்சை ஒரு மணித்தியாலங்களாகும். இலகு வாகன ஓட்டுனர்களுக்கு 40 வினாக்களும். கனரக வாகன ஓட்டுனர்களுக்கு மேலதிகமாக 5 வினாக்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.

மீள மீள உபயோகிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரே தொகுதி வினாத்தாள்களை எழுந்தமாக தெரிவு செய்து பரிட்சாத்திகளுக்கு வழங்குவதால், அதில் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

சில பரீட்சை நிலையங்கள் கணனி மயப்படுத்தப்பட்டு உள்ளது, அங்கு பரீட்சைகள் தொடு திரை கொண்ட கணணிகளின் உதவியுடன் நடாத்தப்படும். ஆனால் அநேகமான பரீட்சை நிலையங்களில் இன்னமும் பாரம்பரிய முறையே பின்பற்றப்படுகிறது.

Driving License யைப் பெற்றுக் கொள்வதற்கான எழுத்து மூல பரீட்சையில் சித்தியடைய 40 இற்கு 30 மதிப்பெண்கள் எடுத்தால் போதும். Heavy Vehicle License பெற்றுக் கொள்ள 41 முதல் 45 வரையான மேலதிக கேள்விகளுக்கும் முகங் கொடுக்க வேண்டும்.

சரியான விடைக்கு உரிய எண்ணை கொடுக்கப்பட்டுள்ள பெட்டியினுள் ஒரு தடவை மாத்திரம் எழுத வேண்டும். அதனை பின்னர் திருத்த முடியாது. திருத்தினால், மாற்றங்களை ஏற்படுத்தினால் அந்த கேள்வி உங்களுக்கு நிராகரிக்கப்பட்ட கேள்வியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

ஆகவே முதலில் உங்களுக்கு உறுதியாக சரி என தெரிந்த வினாக்களுக்கான விடையை எழுதவும். ஒரு விடையின் மேல் எழுதி மாற்றினாலும், அது நிராகரிக்கப்படும். ஆகவே நல்ல பேனையை எடுத்துச் செல்லவும். உள்ளே File களை அனுமதிக்க மாட்டார்கள்.

Exam Marking Paper Model

Exam Marking Paper Model - How to Answer the Questions

பரீட்சையின் போது உங்கள் அடையாளம் NIC/Passport மற்றும் Finger Print மூலம் உறுதி செய்யப்படும். வெறுமனே Learners யை மாத்திரம் நம்பாமல், YouTube Videos, Driving Exam Apps களைப் பயன்படுத்தி, நீங்கள் சித்தியடையும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.

Driving License Written Exam இக்கு தோற்ற உள்ளவர்களுக்கு Learners இனால் ஒரு புத்தகம் வழங்கப்படும். அதில் பரீட்சைக்கு வரும் விடையங்கள் விரிவாக கொடுக்கப்பட்டிருக்கும். உங்கள் Learners அதனை உங்களுக்கு தரா விட்டால், நீங்கள் அதனை Book Shop or Online இல் தேடி பெற்றுக் கொள்ள முடியும்.

சில Learners தமது மாணவர்களுக்கு இதற்கு உதவியாக Online System/Web Student Portal, Apps(Android/iOS) களை உருவாக்கியுள்ளன.

அதனை முழுமையாக படிப்பதன் மூலமும். 176 கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள்களை செய்து பார்ப்பதன் மூலம் நீங்கள் சித்தியடையும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.

1. மோட்டார் வாகன திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆங்கில பாட புத்தகம் - Sri Lanka Drivers - Highway Code

2.  மோட்டார் வாகன திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி வினாக்கள். இவற்றைப் போன்ற, அல்லது இதே வினாக்கள் தான் பரிட்சை வினாத்தாளில் கொடுக்கப்படும். - Exam Model Papers without Answers in Tamil

3. மோட்டார் வாகன திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள தமிழ் மாதிரி வினாக்களுக்கான சரியான பதில்கள். சிங்கள மொழி மூல மாதிரி வினாத்தாளில் இருந்து பெறப்பட்டவை. - Exam Model Papers with Answers in Tamil

Keywords: டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக சோதனை, பரீட்சை, ஓட்டுநர் உரிமம்,  ஓட்டுநர் சோதனையில் தேர்ச்சி பெற, Department of Motor Traffic Driving License - 2015 December - Tamil Sample Papers With Answers, Sri Lanka Driving Exam - தமிழ். Download Tamil Mock Exam, Tamil Exam Papers with Answers